செய்திகள்

ஐ.எஸ்.எல்.: அரையிறுதிக்கு முன்னேறுவது யார்? கேரளா - கவுகாத்தி இன்று பலப்பரீட்சை

Published On 2016-12-04 09:42 GMT   |   Update On 2016-12-04 09:42 GMT
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து அரையிறுதிக்கான போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ்- கவுகாத்தி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொச்சி:

3-வது இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய 3 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. அரையிறுதிக்கு முன்னேறும் 4-வது அணி எது என்பது இன்று தெரியும்.

இன்று இரவு நடக்கும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- கவுகாத்தி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கேரளா 19 புள்ளிகளுடனும், கவுகாத்தி 18 புள்ளிகளுடனும் முறையே 4-வது, 5-வது இடத்தில் உள்ளன.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். போட்டி டிராவில் முடிந்தால் கேரளா 20 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழையும். இதனால் கட்டாயம் வெற்றி வேண்டிய நெருக்கடியில் கவுகாத்தி அணி உள்ளது.

அந்த அணி இதுவரை அரையிறுதிக்கு முன்னேறியது இல்லை. முதல் முறையாக முன்னேறும் ஆர்வத்தில் இருக்கிறது. கேரளா 2014-ம் ஆண்டு சீசனில் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்றது. அந்த அணி 2-வது முறையாக அரையிறுதிக்குள் நுழையும் முனைப்பில் உள்ளது.

Similar News