செய்திகள்

சச்சினை கடத்த வேண்டும்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன்

Published On 2016-12-04 04:47 GMT   |   Update On 2016-12-04 04:47 GMT
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரை கடத்த வேண்டும் என பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

இங்கிலாந்து - இந்தியா இடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இரு போட்டிகளில் தோல்வியை தழுவியது. ஒருபோட்டி ‘டிரா’ செய்யப்பட்டது. இன்னும் இரு போட்டிகளில் இருநாட்டு அணியினரும் மோதவுள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியினர் விளையாடிவரும் விதத்தை பார்க்கும்போது அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ’லிட்டில் மாஸ்டர்’ சச்சின் தெண்டுல்கரை நான் பிரிட்டனுக்கு கடத்திச்செல்ல வேண்டியிருக்கும் என பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் சார்பில் நடைபெற்ற தலைமையாளர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய டேவிட் கேமரூன், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் விளையாட்டு ஆர்வத்தை வெகுவாக புகழ்ந்தார். அவரை ‘கோல்ப்’ விளையாட்டில் வெல்வது அவ்வளவு சுலபமானது அல்ல என்றும் கேமரூன் கூறினார்.

மேடை பேச்சின் மூலம் மக்களை கவர்வதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனித்திறமை பெற்றவர் என்றும் அவர் தெரிவித்தார்.

Similar News