செய்திகள்

ஓட்டலுக்கு பெண்களை அழைத்து சென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம்

Published On 2016-12-01 04:05 GMT   |   Update On 2016-12-01 04:05 GMT
வங்காளதேச முன்னணி வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர் அல்-அமின் ஹூசைன், பேட்ஸ்மேன் சபிர் ரகுமான் இவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐ.பி.எல். பாணியில் வங்காளதேச பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வங்காளதேச முன்னணி வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர் அல்-அமின் ஹூசைன், பேட்ஸ்மேன் சபிர் ரகுமான் ஆகியோர் ஒழுங்கீன நடவடிக்கையில் சிக்கியுள்ளனர்.

இவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதித்து வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் தண்டனை கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருவரும் என்ன தவறு செய்தார்கள் என்பதை கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. ஆனால் ஓட்டலில் தங்களது அறைக்கு சிறப்பு விருந்தினர் என்ற பெயரில் பெண்களை அழைத்து சென்றதாகவும், அதனால் தான் கிரிக்கெட் வாரியம் இந்த பிரச்சினையை ரொம்ப தீவிரமாக எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Similar News