செய்திகள்

சந்தோஷ் கோப்பை கால்பந்து: தமிழக அணி தேர்வு

Published On 2016-12-01 03:32 GMT   |   Update On 2016-12-01 03:32 GMT
சந்தோஷ் கோப்பைக்கான 71-வது சீனியர் தேசிய கால்பந்து போட்டிக்கு தமிழக அணி தேர்வு சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
சந்தோஷ் கோப்பைக்கான 71-வது சீனியர் தேசிய கால்பந்து போட்டியில் தென்மண்டல தகுதி சுற்று இந்த மாதம் கடைசி வாரம் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான தமிழக அணி தேர்வு சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தினமும் காலை 6 மணி முதல் 9.30 வரையும், மாலையில் 3 மணி முதல் 6 மணி வரையும் அணித்தேர்வுக்கான பயிற்சியில் வீரர்கள் ஈடுபடுவார்கள். அதன் அடிப்படையில் தமிழக அணி தேர்வு செய்யப்படும்.

Similar News