செய்திகள்

பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்ற மாரியப்பன் உள்பட 4 பேருக்கு பாராட்டு விழா

Published On 2016-10-27 08:01 GMT   |   Update On 2016-10-27 08:02 GMT
பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் உள்பட 4 பேருக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடந்தது.
சென்னை:

மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதில் 19 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆக மொத்தம் 4 பதக்கங்களை பெற்றது.

தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார். வட்டு எறிதலில் தேவேந்திர ஜாஜாரியா (ராஜஸ்தான்) தங்கம் வென்றார். குண்டு எறிதலில் தீபா மாலிக் (அரியானா) வெள்ளிப் பதக்கமும், உயரம் தாண்டுலில் வருண்சிங் (உத்தரபிரதேசம்) வெண்கல பதக்கமும் பெற்றனர்.

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் உள்பட 4 பேருக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடந்தது. ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில் அவர்கள் பாராட்டப்பட்டனர். மாரியப்பனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இதற்கான கார் சாவி அவரிடம் கொடுக்கப்பட்டது.

தேவேந்திர ஜாஜாரியா, தீபா மாலிக், வருண்சிங் ஆகிய 3 பேருக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்கள் பரிசாக வழங்கி பாராட்டப்பட்டனர்.

பள்ளி தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன், முதல்வர் பிரபு உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.

Similar News