செய்திகள்

தனது பாணியில் சிக்சர் அடித்து 9 ஆயிரம் ரன்னைக் கடந்தார் டோனி

Published On 2016-10-23 14:03 GMT   |   Update On 2016-10-23 14:03 GMT
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி தனது பாணியில் சிக்சர் அடித்து 9 ஆயிரம் ரன்னைக் கடந்து அசத்தினார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 285 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. 8.4 ஓவரில் 41 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா ரோகித் சர்மா மற்றும் ரகானே விக்கெட்டுக்களை இழந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் டோனி 4-வது வீரராக களம் இறங்கினார்.

தொடக்க முதலே அதிரடியாக விளையாட தொடங்கினார். இந்த போட்டிக்கு முன் டோனி 280 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8978 ரன்கள் குவித்திருந்தார். இன்றைய போட்டியில் 22 ரன்கள் எடுத்தால் 9 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற மைல்கல்லை எட்டுவார் என்ற நிலைமை இருந்தது.

சிறப்பாக விளையாடிய டோனி 31 பந்தில் 2 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்திருந்தார். தான் சந்தித்த 32-வது பந்தை சான்ட்னெர் வீசினார். இந்த பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கி 9 ஆயிரம் ரன்னைக் கடந்தார்.

டோனி பெரும்பாலான போட்டிகளை சிக்ஸ் அடித்து முடித்து வைப்பதுதான் வழக்கம். 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கான ரன்னை சிக்சர் விளாசித்தான் எடுத்தார். இதைப்போல் ஏராளமான போட்டிகளில் இப்படித்தான் வெற்றியின் ரன்னை அடிப்பது வழக்கம்.

இதனால் டோனி சிக்கர் அடித்துதான் போட்டியை முடித்து வைப்பது வழக்கம் என்றும், அவரது பாணியும் அதுதான் என்று கருதப்பட்டது. அந்த வகையில்தான் இன்று 9 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை தனது பாணியில் சிக்சர் அடித்து கடந்துள்ளார்.

Similar News