செய்திகள்

மலேசியா கிராண்ட் பிரிக்ஸ்: போல் நிலையை அடைந்தார் ஹாமில்டன்

Published On 2016-10-01 11:41 GMT   |   Update On 2016-10-01 11:41 GMT
மலேசியா கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்திற்கான தகுதிச்சுற்றில் முதல் இடம்பிடித்து போல் நிலையை அடைந்தார் மெர்சிடெஸ் அணியின் லெவிஸ் ஹாமில்டன்.
2016-ம் ஆண்டுக்கான பார்முலான ஒன் கார் பந்தயம் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் மெர்சிடெஸ் அணி வீரர் ரோஸ்பெர்க் முதல் இடத்தை பிடித்தார்.

இதன்மூலம் ஒட்டுமொத்த சாம்பியனுக்கான வரிசையில் ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தார். நிகோ ரோஸ்பெர்க் 8 வெற்றிகளுடன் 273 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில உள்ளார். லெவிஸ் ஹாமில்டன் 6 வெற்றிகளுடன் 265 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் மலேசியா கிராண்ட் பிரிக்ஸ் நாளை நடக்கிறது. இந்த போட்டியில் முதல் இடத்தில் இருந்து காரை யார் ஓட்டுவது என்பதற்கான தகுதிச் சுற்று நேற்றும் இன்றும் நடைபெற்றது. இதில் ஹாமில்டன் முதல் இடத்தை பிடித்து போல் நிலையை அடைந்தார். ரெட் புல்ஸ் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 2-வது இடத்தையும, ரோஸ்பெர்க் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

அதன்மூலம் நாளைய மலேசியா கிராண்ட் பிரிக்ஸில் முதல் இடத்தில் இருந்து ஹாமில்டன் பந்தயத்தை தொடங்குவார். இதனால் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ளது.

Similar News