செய்திகள்

ஈடன் கார்டனில் அதிக ரன்கள் குவித்து நியூசி.க்கு நெருக்கடி கொடுப்போம்: விராட் கோலி சொல்கிறார்

Published On 2016-09-29 15:15 GMT   |   Update On 2016-09-29 15:15 GMT
ஈடன் கார்டன் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்து நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டனில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் அதிக ரன்கள் குவித்து நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘கான்பூர் டெஸ்டில் நாங்கள் 400-க்கும் அதிகமாக ரன்கள் குவித்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் அந்த ஸ்கோரை எட்ட முடியவில்லை. ஆகவே, சில தவறுகளை நாங்கள் திருத்த விரும்புகிறோம். நாம் ஒருமுறை அதிக ரன்கள் (முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல்) குவித்துவிட்டால், எதிரணி கூடுதலாக முயற்சி எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் நினைத்ததை விட கூடுதல் செசன் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இது நமக்கு சாதகமான வாய்ப்பை அளிக்கும்.

ஈடன் கார்டன் ஆடுகளத்தை நாம் என்னவாறு கணித்துள்ளமோ? அதைவிட மாறாக இருக்கப்போவதில்லை. அது பொதுவாக பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். அதைவிட பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை. பழைய ஆடுகளத்தைப் போன்றுதான் நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

Similar News