செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்: அயர்லாந்தை 198 ரன்னில் சுருட்டியது ஆஸ்திரேலியா

Published On 2016-09-27 12:40 GMT   |   Update On 2016-09-27 12:40 GMT
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 198 ரன்னில் சுருண்டது.
தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 30-ந்தேதி தொடங்குகிறது. அதன்பின் இரண்டு அணிகளும் அயர்லாந்துக்கு எதிராக தலா ஒரு போட்டியில் விளையாட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் போர்ட்டர்பீல்டு, ஸ்டிர்லிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.2 ஓவர்கள் ஓவர்கள் முடிவில் 47 ரன்கள் சேர்த்தது. ஸ்டிர்லிங் 30 ரன்கள் சேர்த்து ஆடடம் இழந்தார். அடுத்து வந்த ஆண்டர்சன் 39 ரன்களும் போர்ட்டர்பீல்டு 24 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அப்போது அயர்லாந்து 24.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானதால் அயர்லாந்து அணி 43.5 ஓவர்கள் முடிவில் 198 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஜம்பா 3 விக்கெட்டும், ஹாஸ்டிங் மற்றும் போலந்து ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.

இதற்கு முன் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அயர்லாந்து தோல்வியடைந்தது.

Similar News