செய்திகள்

பி.வி.சிந்துவை ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்த விளம்பர நிறுவனம்

Published On 2016-09-27 05:40 GMT   |   Update On 2016-09-27 05:40 GMT
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் பெற்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுடன் விளம்பர நிறுவனம் ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் பெற்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஏற்கனவே ஏராளமான பரிசுகளை அள்ளி சென்றார். அவருக்கு ரூ.13 கோடிக்கு மேல் பரிசு தொகை கிடைத்தது.

இந்த நிலையில் விளம்பர நிறுவன கம்பெனி ஒன்று பி.வி. சிந்துவை ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த விளம்பர நிறுவனம் கொடுக்கும் விளம்பரத்தில் மட்டுமே சிந்து இடம் பெறுவார்.

Similar News