செய்திகள்

கான்பூர் டெஸ்ட்: 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை நியூசிலாந்து 71/1

Published On 2016-09-23 06:18 GMT   |   Update On 2016-09-23 06:20 GMT
கான்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 318 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜடேஜா 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

அதன்பின் நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டாம் லாதம், மார்ட்டின் குப்தில் ஆகியோர் களம் இறங்கினார்கள். அந்த அணி 35 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. குப்தில் 21 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து கேப்டன் வில்லியம்சன் குப்தில் உடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி நிலையாக நின்று இந்தியாவின் பந்து வீச்சை சந்தித்தது. இதனால் இன்றைய 2-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். நியூசிலாந்து அணி மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் சேர்த்துள்ளது. குப்தில் 21 ரன்னுடனும், வில்லியம்சன் 21 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Similar News