செய்திகள்

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தாயகம் திரும்பினார்- டெல்லியில் உற்சாக வரவேற்பு

Published On 2016-09-21 22:38 GMT   |   Update On 2016-09-21 22:38 GMT
ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் மாரியப்பன் உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:

பிரேசிலில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவரான மாரியப்பன் இன்று நள்ளிரவு 3 மணியளவில் தாயகம் திரும்பினார்.

டெல்லி விமான நிலையத்தில் மாரியப்பன் உள்ளிட்ட வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய மந்திரி விஜய் கோயல் பதக்கம் வென்றவர்களை வரவேற்றார்.

முன்னதாக, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த 7-ம் தேதி கோலாகலமாக தொடங்கி 11 நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 160 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 விளையாட்டுக்களில் 528 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

107 தங்கப் பதக்கங்கள் உட்பட 239 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்தது. அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து 147 பதக்கங்களுடன் உள்ளது. இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துடன் இந்த பதக்க பட்டியலில் இந்தியா 43வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதில் இந்தியா சார்பில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் புதிய வரலாறு படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

Similar News