செய்திகள்

நான் கேப்டனாக இருக்கும்போது அணியில் சரியாக ஆதரவு கிடைக்கவில்லை: தில்ஷன்

Published On 2016-08-29 16:15 GMT   |   Update On 2016-08-29 16:15 GMT
இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது சக வீரர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்று தில்ஷன் கூறியுள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் ஆன திலகரத்னே தில்ஷன் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

போட்டிக்குப்பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது தான் கேப்டனாக இருந்த காலத்தில் சக வீரர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றார்.

இதுகுறித்து தில்ஷன் மேலும் கூறுகையில், ‘‘2011-ம் ஆண்டு இலங்கை அணியின் கேப்டன் பதவி எனது கைக்கு வந்தபோது, தற்போது விளையாடாத முன்னாள் கேப்டன்கள் இருவர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், நீண்ட சமாதானத்திற்குப் பின் ஒருவர் சம்மதம் தெரிவித்தார் (அவர் குமார் சங்ககராவா அல்லது ஜெயவர்தனாவா என்று தில்ஷன் தெளிவாக கூறவில்லை).

நியூசிலாந்து அணிக்கெதிரான 3-வது போட்டியின்போது காயம் காரணமாக நான் இடம்பெறவில்லை. அப்போது குமார் சங்ககரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும், நான் கேப்டனாக இருக்கும்போது காயத்தை காரணம் காட்டி மேத்யூஸ் பந்து வீச மறுத்தார். ஆனால், நான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டபின், உடனடியாக பந்து வீசினார். இதனால் நான் ஆச்சர்யம் அடைந்தேன்.

கேப்டன் பதவியில் இருந்து தூக்கியபோது வருத்தம் இருந்தது. ஆனால், எனது தனிப்பட்ட ஆட்டத்தை அது எந்த வகையிலும் பாதிக்கவில்லை’’ என்றார்.

Similar News