செய்திகள்

ஆஸ்திரேலிய வீரர் பால்க்னெர் ஹாட்ரிக்

Published On 2016-08-25 09:09 GMT   |   Update On 2016-08-25 09:51 GMT
இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பால்க்னெர் அடுத்தடுத்து 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
இலங்கை அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பால்க்னெர் அடுத்தடுத்து 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். குசால் பெரைரா, மேத்யூஸ், திசாரா பெரைரா ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றினார்.

ஒருநாள் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 40-வது ஹாட்ரிக் நிகழ்வாகும். ஹாட்ரிக் சாதனை படைத்த 6-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பால்க்னெர் பெற்றார். பாகிஸ்தான் வீரர்கள் அதிகபட்சமாக 8 தடவையும், இலங்கை வீரர்கள் 7 முறையும் ஹாட்ரிக் சாதனை படைத்து உள்ளனர்.

பால்க்னெரின் இந்த ஹாட்ரிக் சாதனை பலன் இல்லாமல் போனது. ஏனென்றால் இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா 82 ரன்னில் தோற்றது.

Similar News