செய்திகள்

டி20 போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார் யுவராஜ் சிங்

Published On 2016-05-26 16:06 GMT   |   Update On 2016-05-26 16:06 GMT
இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் ஆன யுவராஜ் சிங் டி20 போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங். 2007-ம் ஆண்டு இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்றது. இதற்கு யுவராஜ் சிங்கின் அதிரடிதான் முக்கிய காரணம். இந்த தொடரில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்தில் 6 சிக்சர் விளாசி அசத்தினார்.

அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியா 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றது. இந்த தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றவர் யுவராஜ். தற்போது ஐ.பி.எல். தொடரில் யுவராஜ் சிங் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் பிரிவில் கொல்கத்தா அணிக்கெதிராக 30 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டியில் அவர் 43 ரன்கள் எடுத்திருக்கும்போது ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் 4 ஆயிரம் ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார்.

யுவராஜ் சிங் ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், ஐதராபாத் ஆகிய அணிக்காக விளையாடியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் மட்டும் 106 போட்டியில் விளையாடி 2289 ரன்களும், 55 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1134 ரன்களும் சேர்த்துள்ளார்.

Similar News