செய்திகள்

சீனியர் டிவிசன் கால்பந்து: சென்னை-இந்துஸ்தான் ஆட்டம் டிரா

Published On 2016-05-02 02:14 GMT   |   Update On 2016-05-02 02:14 GMT
சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் சென்னை-இந்துஸ்தான் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.
சென்னை, மே.2-

சென்னை கால்பந்து சங்கம் சார்பில் செயின்ட் ஜோசப்ஸ் ஆதரவுடன் சீனியர் மற்றும் முதல் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று சீனியர் டிவிசனில் நடந்த சென்னை எப்.சி.- இந்துஸ்தான் ஈகிள்ஸ் இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஒரு கட்டத்தில் 2-3 என்ற கணக்கில் சென்னை எப்.சி. அணி பின்தங்கி இருந்த நிலையில், 88-வது நிமிடத்தில் அந்த அணியின் ஜகபா ஹம்சா அனபா கோல் போட்டு தோல்வியில் இருந்து காப்பாற்றினார். முன்னதாக நடந்த முதல் டிவிசன் லீக் ஆட்டத்தில் ஒய்.எம்.எஸ்.சி. அணி 3-0 என்ற கோல் கணக்கில் மடோனா மாட்ரிக்சை வீழ்த்தியது.

Similar News