இந்தியா

பாம்பு கடித்த சிறுவனுக்கு ரூ.70 ஆயிரம் இழப்பீடு வழங்க வனத்துறைக்கு சட்ட சேவை ஆணையம் உத்தரவு

Published On 2022-07-10 10:18 GMT   |   Update On 2022-07-10 10:18 GMT
  • சிறுவனின் குடும்பத்தினர், மாவட்ட சட்ட சேவை ஆணையத்திடம் இழப்பீடு கோரி மனு அளித்தனர்.
  • மருத்துவமனை கட்டணங்கள் மற்றும் பிற ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் நாய ரம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் அதுல் பிரகாஷ்.

இவரது மகன் அந்தப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு கடித்து விட்டது.

சிறுவனான அவனை சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு 15 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறுவனின் குடும்பத்தினர், மாவட்ட சட்ட சேவை ஆணையத்திடம் இழப்பீடு கோரி மனு அளித்தனர். மருத்துவமனை கட்டணங்கள் மற்றும் பிற ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த மனுவை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையச் செயலரும், துணை நீதிபதியுமான ரஞ்சித் கிருஷ்ணன், வக்கீல் லைஜோ பி ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தொடர்ந்து வீட்டு முன் பாம்பு கடித்த சிறுவனுக்கு, ரூ.70 ஆயிரம் இழப்பீடு வழங்க, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டுத் தொகையை வனத்துறை வழங்க வேண்டும். வன விலங்குகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வனத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News