இந்தியா

ஏவுகணை பரிசோதனை

தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை வெற்றி

Update: 2022-06-24 20:40 GMT
  • ராடாரில் காணமுடியாத இலக்குகள் உட்பட பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்கும் திறன் வாய்ந்தது.
  • இந்திய கடற்படை கப்பல்களின் பாதுகாப்பு திறனை மேலும் அதிகரிக்கும்.

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள குறைந்த தூர ஏவுகணை ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்திய கடற்படை கப்பலிலிருந்து செங்குத்தாக செலுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை வெற்றிகரமாக இந்த ஏவுகணை தாக்கியது.

இதன் மூலம் ராடாரில் காணமுடியாத இலக்குகள் உட்பட பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக இந்திய கடற்படை கப்பலில் இந்த ஏவுகணை பொருத்தப்படுகிறது.

வெற்றிகரமாக நடைபெற்ற இந்த பரிசோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய கப்பற்படையிருக்கு, பாதுகாப்புத்துறை மந்திரிராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். வான் வழி தாக்குதல்களுக்கு எதிராக இந்திய கடற்படை கப்பல்களின் பாதுகாப்பு திறனை இது மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், டிஆர்டிஓ தலைவரும் பாதுகாப்புத் துறை செயலாளருமான சதீஷ்ரெட்டி ஆகியோரும் இந்த வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News