இந்தியா
null

எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏ.சி. பெட்டியில் சூட்கேஸ்களை சேதப்படுத்திய எலிகள்

Published On 2024-05-22 08:41 GMT   |   Update On 2024-05-22 09:31 GMT
  • வீடியோவுடன் தனது பதிவில், கடந்த 19-ந்தேதி பயணம் செய்த போது எலிகளால் சேதப்படுத்தப்பட்ட எனது சூட்கேஸ் பெட்டிகள் என ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
  • பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதுபோன்ற சேதத்திற்கு பயணிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் சில நகரங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு பெட்டியில் கூட பயணிகள் கூட்டம் அலைமோதுவது தொடர்கிறது.

இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து மும்பை சென்ற ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது சூட்கேஸ்களை எலிகள் கடித்து சேதப்படுத்தியதாக தனது வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. வீடியோவுடன் தனது பதிவில், கடந்த 19-ந்தேதி பயணம் செய்த போது எலிகளால் சேதப்படுத்தப்பட்ட எனது சூட்கேஸ் பெட்டிகள் என ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதுபோன்ற சேதத்திற்கு பயணிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News