இந்தியா

ஆகஸ்ட் 25-ம் தேதி மும்பையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

Published On 2023-07-27 23:52 GMT   |   Update On 2023-07-27 23:52 GMT
  • எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறுகிறது.
  • இதுவரை பாட்னா, பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தன. 26 கட்சிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது. மேலும், தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் 25 மற்றும் 26-ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

காங்கிரஸ் உதவியுடன் நடைபெறும் இந்தக் கூட்டத்தை உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஒருங்கிணைக்கும் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News