இந்தியா

கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்ததால் கொலையா?

Update: 2022-12-04 09:15 GMT
  • கடையில் வைத்து கஞ்சா விற்பனையும் ரகசியமாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
  • முனுசாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரியமேடு அல்லிகுளம் மார்க்கெட் வளாகத்தில் முனுசாமி இரும்பு கடை வைத்திருந்த பகுதியிலேயே கொலையாளிகளில் ஒருவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த கடையில் வைத்து கஞ்சா விற்பனையும் ரகசியமாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் குறிப்பிட்ட கடைக்கு சென்று எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு முனுசாமிதான் காரணம் என்று கொலையாளிகள் கருதியதாக தெரிகிறது. இதனாலேயே அவர்கள் முனுசாமியை கொலை செய்திருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாகவும் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

பழைய இரும்பு வியாபாரி முனுசாமிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர்களில் முனுசாமியின் மகனுக்கு நேற்று பிறந்த நாளாகும். மகன் பிறந்த நாளில் முனுசாமியை கொன்று விட்டார்களே என அவரது உறவினர்கள் கண்ணீர் வடித்தனர். இக்கொலை சம்பவம் முனுசாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News