இந்தியா
டெல்லி விமான நிலையத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

கரீபியன் நாடுகளில் சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Published On 2022-05-22 18:34 GMT   |   Update On 2022-05-22 18:34 GMT
ஜமைக்கா நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றார்.
புதுடெல்லி:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் ஜமைக்கா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனெடின்ஸ் ஆகிய கரீபியன் நாடுகளுக்கு 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

முதலில் ஜமைக்கா சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை அவா் சந்தித்து இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் அந்நாட்டு பாராளுமன்றத்தின் கூட்டத் தொடரில் உரையாற்றினார். இதன்மூலம் ஜமைக்கா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றார்.

மேலும், ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் உள்ள சாலை ஒன்றிற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சூட்டினார். அதற்கான பெயர்ப்பலகையையும் அவர் திறந்து வைத்தார்.

இதையடுத்து, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனெடின்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோர் விமானம் மூலம் தலைநகர் டெல்லி திரும்பினர். அவர்களை அதிகாரிகள் வரவேற்றனர்.

Tags:    

Similar News