இந்தியா
கோப்புப்படம்

அதிபர் ஷேக் கலீஃப்பா மறைவுக்கு இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு

Update: 2022-05-13 15:39 GMT
நாடு முழுவதும் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (73) இன்று காலமானார். கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த அதிபர் ஷேக் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு இந்திய பிரதமர் உள்பட பல்வேறு நாட்டு முக்கியத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃப்பாவின் மறைவுக்கு இந்தியாவில் நாளை ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், நாடு முழுவதும் உள்ள தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்.. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் காலமானார்
Tags:    

Similar News