இந்தியா
ராஜஸ்தான் பில்வாரா பகுதி

இளைஞர் கொலையால் பதற்றம்- ராஜஸ்தான் பில்வாரா பகுதியில் இணைய சேவைகள் முடக்கம்

Published On 2022-05-11 07:25 GMT   |   Update On 2022-05-11 09:18 GMT
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு நடந்த வகுப்புவாத பிரச்சனை ஒன்றின் காரணமாக கரெளலி, ஆழ்வார் மற்றும் ஜோத்பூர் ஆகிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெய்பூர்:

ராஜஸ்தானின் பில்வாரா பகுதியில், கோடவாலி காவல் நிலையம் அருகே 22 வயதான இளைஞர் ஒருவர் தனது தம்பிக்கு ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய சென்றுள்ளார். அப்போது அவர் மாற்று மத இளைஞரால் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இந்த கொலையை கண்டித்து சில வலதுசாரி இயக்கத்தினர் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்சனை மேலும் வளராமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நிலைமை கைமீறி செல்லாமல் தடுக்க பில்வாரா பகுதியில் நாளை காலை 6 மணி வரை இணையம் முடக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு நடந்த வகுப்புவாத பிரச்சனை ஒன்றின் காரணமாக கரெளலி, ஆழ்வார் மற்றும் ஜோத்பூர் ஆகிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் மோடி கூறுகையில், பில்வாரா பகுதியில் நேற்று இரவு முதல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையம் முடக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Tags:    

Similar News