இந்தியா
ஜியோமி நிறுவனம்

ஜியோமியின் ரூ.5,551 கோடி சொத்துக்கள் முடக்க நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Published On 2022-05-07 05:42 GMT   |   Update On 2022-05-07 05:42 GMT
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்தது.
பெங்களூர்:

கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி இந்தியாவில் இயங்கும் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான சீனாவை சேர்ந்த ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்தது.

இதை எதிர்த்து, ஜியோமி நிறுவனம் சார்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News