இந்தியா
கௌதம புத்தா நகரில் 144 தடை உத்தரவு

கொரோனா அதிகரிப்பு- உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகரில் 144 தடை உத்தரவு அமல்

Published On 2022-05-01 22:50 GMT   |   Update On 2022-05-01 22:50 GMT
பொது இடங்களில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்கள் ஒன்று கூடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 கௌதம் புத்த நகர்:

டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், அரியானா உள்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நேற்றைய காலை நிலவரப்படி டெல்லியில் அதிகபட்சமாக 1,520 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அரியானாவில் 490, உத்தர பிரதேசத்தில் 275, மகாராஷ்டிரத்தில் 155, கர்நாடகாவில் 126 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மே 1 முதல் 31 வரை 
உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகரில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொது இடங்களில் முககவசம் அணிவது  கட்டாயமாக்கப் பட்டுள்ளதுடன், பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வுகளின் போது பள்ளிகளில் சமூக இடைவெளி பராமரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி யாரும் போராட்டங்கள் அல்லது உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கூடாது. வழிபாட்டுத் தளங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், பொது இடங்களில் பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படாது என்றும் அந்நகர காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News