இந்தியா
டெல்லி ரோகினி நீதிமன்றம்

டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு- இருவர் காயம்

Published On 2022-04-22 10:18 GMT   |   Update On 2022-04-22 12:37 GMT
வாக்குவாதம் முற்றி வன்முறையாக மாறியதால், கான்ஸ்டபிள் தரையை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் இன்று காலை 9.40 மணியளவில் வாயில் எண் 8ன் அருகில் சஞ்சீவ் சவுத்ரி மற்றும் ரிஷி சோப்ரா ஆகிய இரு வழக்கறிஞர்களுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த நாகாலாந்து ஆயுதம் ஏந்திய காவல்துறையின் கான்ஸ்டபிள் ஒருவர், இடையே தலையிட்டு பிரச்சினையை துப்பாக்கி சூடு நடத்தி கலைக்க முற்பட்டுள்ளார். கான்ஸ்டபிள் துப்பாக்கியை தரையை நோக்கி சுட்டபோது கான்கிரீட் கற்கள் எகிறி பட்டதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது:-

ரோகினி நீதிமன்ற வாயிலுக்கு வெளியே ஒரு வழக்கறிஞருக்கும் பாதுகாவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விஷயங்கள் தீவிரமடைந்து மேலும் 2-3 வழக்கறிஞர்கள் அவர்களுடன் இணைந்தனர். வாக்குவாதம் முற்றி வன்முறையாக மாறியதால், கான்ஸ்டபிள் தரையை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் - சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Tags:    

Similar News