இந்தியா
நிலநடுக்கம்

அருணாச்சலப் பிரதேசத்தில் நில அதிர்வு- ரிக்டர் அளவு 5.3 ஆக பதிவு

Published On 2022-04-15 03:27 GMT   |   Update On 2022-04-15 09:38 GMT
நில அதிர்வு குறித்து தேசிய நில அதிர்வு மையம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று காலை 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பாங்கினுக்கு வடக்கே 1176 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

சீனா பெய்ஜிங்கில் இன்று காலை 9.26 மணிக்கு (பெய்ஜிங் நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் அதிர்வு அருணாச்சலப் பிரதேசத்தில் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

இதையும் படியுங்கள்.. கர்நாடகா மந்திரி ஈஸ்வரப்பாவை கைது செய்ய வலியுறுத்தல்- எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா போராட்டம்
Tags:    

Similar News