search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "earth shake"

    • வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
    • சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான பந்தர் அப்பாஸின் தென்மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவாகி உள்ளது.

    இதனால், வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.

    இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சயே கோஷ் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    ஈரானின் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு நிமிடத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு 6-ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தை இது நினைவூட்டுவதாக பலர் சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
    • இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ள பக்தபூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

    இதன் எதிரொலி காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தை இது நினைவூட்டுவதாக பலர் சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    ×