இந்தியா
நடிகை ரோஜா

காளஹஸ்தியில் நடிகை ரோஜா ராகு-கேது பூஜையில் வழிபாடு

Update: 2022-04-09 10:22 GMT
ஆந்திர மாநிலத்தில் புதிய அமச்சரவையில் எம்.எல்.ஏ. ரோஜாவிற்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்று தகவல் பரவி வரும் நிலையில் அவர் காளஹஸ்தி கோவிலில் ராகு-கேது பூஜையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா ஸ்ரீகாஹஸ்தி கோவிலில் தரிசனம் செய்தார். அவரை கோவில் நிர்வாக அதிகாரி பெத்திராஜூ, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுருதரக சீனிவாசலு மற்றும் கோவில் அதிகாரிகள் வரவேற்றனர்.

ராகு-கேது சிறப்பு சர்ப்பதோ‌ஷ நிவர்த்தி பூஜையில் பங்கேற்று நடிகை ரோஜா வழிபட்டார். கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகே அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.

மேலும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் மற்றும் நினைவு பிரசாக சாமி புகைப்படமும் வழங்கப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட உள்ள ஆந்திர மாநிலத்தில் புதிய அமச்சரவையில் எம்.எல்.ஏ. ரோஜாவிற்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்று தகவல் பரவி வரும் நிலையில் அவர் காளஹஸ்தி கோவிலில் ராகு-கேது பூஜையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News