இந்தியா
நிதின் கட்கரி

ஜம்மு-காஷ்மீரில் உள்கட்டமைப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது- நிதின் கட்கரி தகவல்

Published On 2022-04-05 23:43 GMT   |   Update On 2022-04-06 00:38 GMT
எதிர்காலத்தில் ஸ்ரீநகரில் இருந்து வெறும் 8 மணி நேரத்தில் டெல்லியை மக்கள் சென்றடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புது தில்லி:

தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் இயக்குனரை கவுரவிப்பதற்காக, இந்திய சர்வதேச மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி பேசியதாவது:

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பல முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இது இந்த பிராந்தியத்தின் இணைப்பை மேம்படுத்தும். நாங்கள் காஷ்மீர் மற்றும் லடாக் இடையே  ஆசியாவின் மிக நீளமான சுரங்கப் பாதையை உருவாக்குகிறோம். 

லே-மனாலி வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள  அடல் சுரங்கப் பாதை ஏற்கனவே பயண நேரத்தைக் குறைத்துள்ளது. ஸ்ரீநகர்-கத்ரா-டெல்லி விரைவுச் சாலையின் பணியும் நடைபெற்று வருகிறது.

எதிர்காலத்தில் ஸ்ரீநகரில் இருந்து டெல்லியை எட்டு மணி நேரத்தில் மக்கள் சென்றடைவார்கள். நல்ல உள்கட்டமைப்பு வசதி இருந்தால் காஷ்மீருக்கு அதிகமான மக்கள் வருவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News