இந்தியா
திமுக எம்பி கதிர் ஆனந்த்

பாராளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி. தனி நபர் மசோதா அறிமுகம்

Published On 2022-04-02 10:06 GMT   |   Update On 2022-04-02 11:16 GMT
மின்சக்தி உற்பத்திக்கு வழிவகை செய்வதற்கு ஏதுவாக ஒரு தனிநபர் மசோதாவை வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் பாராளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
நகர்ப்புறங்களில் குப்பைக் கூளங்களாக சேர்ந்திடும் திடக்கழிவுகளை பிரித்து மறுசுழற்சி செய்வதற்கும் மின்சக்தி உற்பத்திக்கு வழிவகை செய்வதற்கும் ஏதுவாக ஒரு தனிநபர் மசோதாவை வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் பாராளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

திடக்கழிவுகள், திடக்கழிவிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யும் ஆலைகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய திடக் கழிவுகளை மின்சார உற்பத்தி செய்திடவும் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை நிலப்பரப்புகளுக்கு கொண்டு செல்லவும் மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான வி‌ஷயங்களுக்காக திடக்கழிவு மேலாண்மை, 2022 என்ற தனிநபர் மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினர்.

Tags:    

Similar News