இந்தியா
மும்பை பங்குச்சந்தை

உக்ரைன்- ரஷியா போர் எதிரொலி: கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது மும்பை பங்குச்சந்தை

Published On 2022-02-24 11:13 GMT   |   Update On 2022-02-24 11:17 GMT
கச்சா எண்ணெய், வெள்ளி, காப்பர், இந்தியா விக்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.
மும்பை பங்குச்சந்தை இன்று காலை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1813 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. இதனால் பங்குச்சந்தை 55,418 புள்ளிகளில் வர்த்தகமாக தொடங்கியது. அதன்பின் பெரிய அளவில் உயரவில்லை.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில், மும்பை பங்குச்சந்தை இன்று மாலை 4 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 2,702.15 புள்ளிகள் கடும் வீழ்ச்சியடைந்து 57,232.06 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 815 புள்ளிகள் குறைந்து, 16,247 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.  

நெஸ்டிலே இந்தியா, நிஃப்டி வங்கி, ஹரிண்டால்கோ இன்டஸ் ஆகியவற்றின் பங்குகள் சரிந்து காணப்பட்டன. கச்சா எண்ணெய், வெள்ளி, காப்பர், இந்தியா விக்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

இதையும் படியுங்கள்.. ரஷியாவிடம் சரண் அடைய மாட்டோம்- உக்ரைன் அதிபர் திட்டவட்டம்
Tags:    

Similar News