இந்தியா
மதுக்கடை உரிமையாளரின் கட்டை விரலை கடித்தவர் கைது

பில்லுக்கு பணம் கேட்ட மதுக்கடை உரிமையாளரின் கட்டை விரலை கடித்தவர் கைது

Update: 2022-01-18 06:38 GMT
மதுபானக்கடை உரிமையாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கைவிரலை கடித்தவரையும், அவரது நண்பரையும் கைது செய்துள்ளதாக உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
முசாபர்நகர்:

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஜன்சாத் பகுதியில் மதுபானக்கடையின் பார் ஒன்றில் உள்ளுர் பகுதியை சேர்ந்த  சுனில் குமாரும் அவரது நண்பரும் மது குடித்துள்ளனர்.  அவர்களிடம் குடித்த மதுபானத்திற்கு பணத்தை செலுத்துமாறு கடை உரிமையாளர் அசோக்குமார் கேட்டுள்ளார். 
அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென அசோக்குமாரின் கட்டை விரலை சுனில்குமார் கடித்துள்ளார்.  

இது குறித்த புகாரின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார்,  சுனில்குமாரையும், அவரது நண்பரையும் கைது செய்தனர். காயமடைந்த மதுபானக்கடை உரிமையாளர் அசோக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
Tags:    

Similar News