இந்தியா
மத்திய பிரதேச மந்திரி கமல் பட்டேல், பிரதமர் மோடி

ராமர், கிருஷ்ணர் போன்ற கடவுளின் அவதாரம் பிரதமர் மோடி - சொல்கிறார் மத்திய பிரதேச மந்திரி

Published On 2022-01-18 06:03 GMT   |   Update On 2022-01-18 07:56 GMT
நாட்டின் கலாச்சாரம் அழிக்கப்பட்டு, விரக்தியான சூழல் நிலவியபோது, ​​அதை முடிவுக்குக் கொண்டு வரவே நரேந்திர மோடி பிறந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போபால்:

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அம்மாநில  விவசாயத்துறை மந்திரி கமல் பட்டேல், செய்தியாளர்களிடம் பேசியதாவது :

இந்தியாவை வழிநடத்துவது, ஊழலில் இருந்து விடுவிப்பது, பொது நலனை உறுதி செய்வது போன்ற பிரதமர் மோடியால் நிறைவேற்றப்பட்ட பணிகள் சாதாரண ஒருவரால் நிறைவேற்றபடாதவை. இந்தியாவில் எந்த ஒரு நெருக்கடியான நிலையும், கொடுங்கோல் சூழலும் அதிகரித்த போதெல்லாம், கடவுள் மனித வடிவில் அவதாரம் எடுக்கிறார் என்று நமது மதம் மற்றும் கலாச்சாரத்தில் கூறப்பட்டுள்ளது. ராமர் மனித உருவில் அவதாரம் எடுத்து, ராவணனைக் கொன்று, மற்ற தீய சக்திகளை வென்று, மக்களைப் பாதுகாத்து 'ராமராஜ்யத்தை' நிறுவினார். 

கம்சனின் அட்டூழியங்கள் அதிகரித்தபோது, ​​பகவான் கிருஷ்ணர் பிறந்து அவரது கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வந்தார், சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளித்தார். அதேபோல், காங்கிரஸ் ஆட்சியில் அட்டூழியங்கள் அதிகரித்த போது.. ஊழல், சாதி வெறி தலைதூக்கி, நாட்டின் கலாச்சாரம் அழிக்கப்பட்டு, விரக்தியின் சூழல் எங்கும் நிலவியபோது, ​​அதை முடிவுக்குக் கொண்டுவர நரேந்திர மோடி பிறந்தார். 

இவை ஒரு சாதாரண மனிதனால் செய்ய முடியாத காரியங்கள்.எனவே, பிரதமர் நரேந்திர மோடி ஒரு அவதாரம், சாத்தியமற்ற செயல்களை செய்தார். அவர் கடவுளின் அவதாரம்.இவ்வாறு மத்தியப் பிரதேச மந்திரி கமல் பட்டேல் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News