இந்தியா
மேற்கு வங்க மாநில கிராமத்திற்குள் நுழைந்த புலி பிடிபட்டது

கிராமத்திற்குள் நுழைந்த புலி - பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது

Published On 2022-01-01 21:27 GMT   |   Update On 2022-01-01 21:27 GMT
கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின், பிடிபட்ட புலி வனப்பகுதியில் விடப்படும் என்று மேற்கு வங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் குல்தாலி கிராம பகுதியில் இரண்டு புலிகள் நுழைந்தன.  இதை பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்த புலிகளை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குமிர்மரி பகுதியில் ராயல் பெங்கால் வகையை சேர்ந்த ஒரு புலி பிடிபட்டது .

இது குறித்து மேற்கு வங்க மாநில வனத்துறை அமைச்சர்  ஜோதிப்ரியோ மல்லிக் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :

காலையில் அப்பகுதிக்குள் நுழைந்த புலி, வன ஊழியர்களை அலைக்கழித்தது. நாங்கள் வேலி தடுப்புகளை அமைத்தோம், ஆடுகள் கொண்ட பெரிய கூண்டுகளை நிறுவினோம், ஆனால் அவை சரியாக வேலை செய்யவில்லை.  பின்னர், அந்த விலங்கு கண்டுபிடிக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.  இன்னும் இரண்டு நாட்களில் எல்லாம் சரியாகும் பட்சத்தில் கால்நடை மருத்துவர்களால் புலி பரிசோதிக்கப்பட்டு காட்டில் விடப்படும்.

அந்த விலங்கின் வேட்டையாடும் திறன் குறைந்துள்ளது கண்டறியப்பட்டால் அலிப்பூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்படும். இனச்சேர்க்கை காலம் என்பதால் துணையைத் தேடி சிற்றோடைகள் மற்றும் ஆறுகளைக் கடந்து அவை வருகின்றன. குல்தாலியின் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு புலிகள் நுழைந்தன. அதில் ஒன்று 10 மணி நேரத்துக்குப் பிறகு பிடிபட்டாலும், மற்றொரு புலியை ஆறு நாட்களுக்குப் பிறகு பிடிக்க முடியும்.

இந்தப் புலிகள் வழிதவறிச் சென்ற கிராமங்களில், மனிதர்களையோ அல்லது பிற விலங்குகளையோ தாக்கவில்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News