இந்தியா
மும்பை போலீஸ்

காலிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையை தாக்க திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கையால் காவல்துறை அலர்ட்

Published On 2021-12-30 12:37 GMT   |   Update On 2021-12-30 12:37 GMT
மும்பையில் போலீசாருக்கான அனைத்து விடுமுறைகளும் வார விடுமுறைகளும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மும்பை:

காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தி, பெருமளவில் சேதங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர்.

மும்பை, தாதர், பாந்த்ரா சர்ச்கேட், சிஎஸ்எம்டி, குர்லா மற்றும் பிற ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை 3000-க்கும் மேற்பட்ட ரெயில்வே அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

போலீசாருக்கான அனைத்து விடுமுறைகளும் வார விடுமுறைகளும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பையில் பணியமர்த்தப்பட்டுள்ள அனைத்து காவலர்களும் பணியில் இருக்க வேண்டும் என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News