இந்தியா
முதல் மந்திரி பிரமோத் சாவந்த்

இரவுநேர ஊரடங்கு குறித்து முடிவு செய்யவில்லை - கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

Published On 2021-12-29 00:12 GMT   |   Update On 2021-12-29 00:12 GMT
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோவா:

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பைக் குறைக்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, கோவாவில் நேற்று ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கோவா முதல் மந்திரி பிரமோத் சாவந்த் கூறுகையில், மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரிக்கும் பட்சத்தில் ஜனவரி 3-ம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும்.  

இருப்பினும், கிறிஸ்மஸ்-புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் சுற்றுலா வணிகம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, கடலோர மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்தார். 

Tags:    

Similar News