இந்தியா
ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனை

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653 ஆக உயர்வு

Published On 2021-12-28 04:49 GMT   |   Update On 2021-12-28 09:01 GMT
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேர் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஒமைக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை  நிலவரப்படி ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது   இதுவரை 186 பேர் சிகிச்சைக்கு பின்  ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 167 பேரும், டெல்லியில் 165 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் 49, ராஜஸ்தான் 46, தெலங்கானா 55, கர்நாடகாவில் 31, கேரளாவில் 57 பேர், ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் 34 பேர் ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
Tags:    

Similar News