இந்தியா
பாராளுமன்றம்

தேர்தல் சீர்திருத்த மசோதா - பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றம்

Published On 2021-12-21 21:06 GMT   |   Update On 2021-12-21 21:06 GMT
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்த மசோதா, ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின் சட்டமாகும்.
புதுடெல்லி:

தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்திருப்பது ஆகும். இதை தடுக்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யவும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது. 

இதற்காக தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்தது. அதன்படி உருவாக்கப்பட்ட தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021-க்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.

இதற்கிடையே, இந்த மசோதாவை மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ மக்களவையில் தாக்கல் செய்தார். மசோதாவை  பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

Tags:    

Similar News