இந்தியா
வீரப்பமொய்லி

அரசியலில் என்னை ஒழிக்க முயற்சி செய்தார்: குமாரசாமி மீது வீரப்பமொய்லி குற்றச்சாட்டு

Published On 2021-12-13 02:43 GMT   |   Update On 2021-12-13 02:43 GMT
கர்நாடகத்தில் புதிதாக 50 லட்சம் உறுப்பினர்களை காங்கிரசில் சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறோம் என்று முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி கூறியுள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி சிக்பள்ளாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வீரப்பமொய்லிக்கு அரசியல் மறுவாழ்வு கொடுத்தது நானே என்று குமாரசாமி கூறியுள்ளார். எனக்கு அவர் அரசியல் மறுவாழ்வு கொடுக்கவில்லை. மாறாக என்னை அரசியலில் ஒழிக்க குமாரசாமி முயற்சி செய்தார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி வைத்ததால் தான் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தேவகவுடா, குமாரசாமியை நான் நம்பி தவறு செய்தேன்.

எனது அரசியல் வாழ்க்கையில் அவர்களிடம் சென்றது நான் செய்த மிகப்பெரிய தவறு. இனிமேல் அவர்களிடம் நான் செல்ல மாட்டேன். கர்நாடகத்தில் புதிதாக 50 லட்சம் உறுப்பினர்களை காங்கிரசில் சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறோம். இதன் மூலம் வருகிற 2023-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதே எங்களின் குறிக்கோள்.

இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.
Tags:    

Similar News