இந்தியா
திருப்பதி கோவில்

திருப்பதியில் புத்தாண்டையொட்டி கூடுதலாக பக்தர்களை அனுமதிக்க ஏற்பாடு

Published On 2021-12-12 04:36 GMT   |   Update On 2021-12-12 04:36 GMT
கனமழையால் பாதிக்கப்பட்ட 2-வது மலைப்பாதையில் சாலைகள் புனரமைக்க ரூ.3.95 கோடியிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை ரூ.3.60 கோடியிலும் சீரமைக்கப்பட உள்ளதாக அறங்காவலர் குழுத்தலைவர் தெரிவித்தார்.
திருப்பதி:

திருப்பதியில் உள்ள அன்னமய்யா பவனில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு குறைவதை கருத்தில் கொண்டு புத்தாண்டு தரிசனத்தில் அதிக பக்தர்கள் அனுமதிக்கவும் குறைந்த எண்ணிக்கையில் சுப்ரபாதம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்கவும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்யாண உற்சவம் போன்ற இந்து தர்ம நிகழ்ச்சிகள் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் மேற்கொள்ளப்படும்.

தேவஸ்தான தகவல் தொழில்நுட்ப பிரிவு மேலும் பலப்படுத்தப்படும்.

கனமழையால் பாதிக்கப்பட்ட 2-வது மலைப்பாதையில் சாலைகள் புனரமைக்க ரூ.3.95 கோடியிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை ரூ.3.60 கோடியிலும் சீரமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News