இந்தியா
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - இந்திய பிரதமர் மோடி

இந்தியா - ரஷியா நட்பு நிலையானது: பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2021-12-06 13:53 GMT   |   Update On 2021-12-06 13:53 GMT
இந்தியா - ரஷியா இடையேயான உறவு தனித்துவமான மற்றும் நம்பக்கத்தன்மை கொண்ட நட்பாகும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியா - ரஷியா இடையேயான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுள்ளனர்.

இரு நாடுகளின் 21-வது உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த மாநாட்டின் போது பேசிய பிரதமர் மோடி, கொரோனாவால் பல்வேறு சவால்களை சந்தித்தபோது இந்தியா - ரஷியா இடையேயான நட்பு வளர்ந்து கொண்டு செல்கிறது. நமது சிறப்பு வாய்த மற்றும் யுக்தி நிறைந்த கூட்டணி தொடர்ந்து வலிமையடைந்து வருகிறது.

கடந்த சில தசாப்தங்களில் உலகம் பல்வேறு அடிப்படை மாற்றங்களை கண்டுள்ளது. வேவ்வெறு புவிசார் அரசியல் கூட்டணிகள் உருவெடுத்து வருகின்றன. ஆனால், இந்தியா - ரஷியா இடையேயான நட்பு தொடர்ந்து நிலையாக உள்ளது. இந்தியா - ரஷியா இடையேயான உறவு தனித்துவமான மற்றும் நம்பக்கத்தன்மை கொண்ட நட்பாகும்’ என்றார்.


Tags:    

Similar News