செய்திகள்
உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழப்பு- உலக சுகாதார அமைப்பு தகவல்

Published On 2021-11-28 02:00 GMT   |   Update On 2021-11-28 02:00 GMT
அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் தேசிய உடல் உறுப்பு தான தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல டாக்டர் மனோஜ் குமார் சாஹு கலந்து கொண்டு இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறைந்து வருவது குறித்து பேசினார்.

அப்போது அவர் “அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “ 1.5 லட்சம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் தேவை என்ற நிலையில், நாட்டில் ஆண்டுக்கு 5,000 பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை நடக்கிறது. அதே போல் சுமார் 2 லட்சம் பேர் கல்லீரல் தானம் கிடைக்காததால் இறக்கின்றனர்” என்றார்.

மேலும் இந்தியாவில் உடல் உறுப்பு தான விகிதம் 0.01 சதவிகிதம் மட்டுமே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News