செய்திகள்
கேரளாவில் மழை

கேரளாவில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2021-11-07 05:05 GMT   |   Update On 2021-11-07 05:05 GMT
கேரளாவில் மலையோர மாவட்டங்களான மலப்புரம் வயநாடு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளதால் ஆபத்தான பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

இந்த மழை இன்றும் நாளையும் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. நாளை பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று கூறியுள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோல மலையோர மாவட்டங்களான மலப்புரம் வயநாடு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளதால் ஆபத்தான பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளது.

இதையும் படியுங்கள்...தொடர் மழை: புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு உபரிநீர் திறப்பு

Tags:    

Similar News