செய்திகள்
சஞ்சய் ராவத்

பாஜகவை முழுமையாக தோற்கடித்தால் பெட்ரோல், டீசல் விலை 50 ரூபாய் குறையும் -சஞ்சய் ராவத்

Published On 2021-11-04 11:09 GMT   |   Update On 2021-11-04 11:09 GMT
இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
மும்பை:

பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்திய மத்திய அரசு, திடீரென நேற்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்தது. இந்த விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த வரி குறைப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவால் வரியை குறைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை 50 ரூபாய்க்கு குறைக்க வேண்டுமானால் பாஜகவை முழுமையாக தோற்கடிக்க வேண்டும் என சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.

‘5 ரூபாய் விலை குறைப்பு எதற்கும் உதவப் போவதில்லை. முதலில் குறைந்தபட்சம் 25 ரூபாய் குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.  பின்னர் 50 ரூபாய் குறைக்கப்பட வேண்டும். இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததை அடுத்து, பெட்ரோல் விலையை 5 ரூபாயை குறைத்த மத்திய அரசு, 50 ரூபாய் குறைக்க வேண்டும் என்றால் பாஜகவை முழுமையாக தோற்கடிக்க வேண்டும்’ என்றார் ராவத்.
Tags:    

Similar News