செய்திகள்
மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார் மோடி

உத்தர பிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Published On 2021-10-25 06:51 GMT   |   Update On 2021-10-25 07:08 GMT
மத்திய அரசு 157 மருத்துவ கல்லூரிகளை திறந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறப்பு விழாவில் பேசும்போது தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இவ்விழாவில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உ.பி. ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய மன்சுக் மாண்டவியா ‘‘இன்று 9 மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைப்பது சாதாரண விசயம் அல்ல. மருத்துவ கல்லூரிகள் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினர் பயனடையும் வகையில் இருக்கும். பிரதமர் மோடி தலைமையின் கீழ் மருத்துவ கல்வி நிர்வாகம் மேம்பட்டுள்ளது. மத்திய அரசு 157 மருத்துவ கல்லூரிகளை திறந்துள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News