செய்திகள்
அயோத்தி ராமர் கோவில்

பொது அறிவு போட்டியில் வென்றால் விமானத்தில் அயோத்திக்கு செல்லலாம்- ம.பி. அரசு அறிவிப்பு

Published On 2021-10-20 04:25 GMT   |   Update On 2021-10-20 05:22 GMT
ராமாயணம் தொடர்பான பொது அறிவு போட்டி தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் நடத்தப்பட உள்ளதாக ஆன்மிக துறை மந்திரி உஷா தாக்குர் கூறினார்.
போபால்:

மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்கு, சுற்றுலா துறையை மேம்படுத்துவதோடு, மக்கள் மத்தியில் ஆன்மிக சிந்தனைகளை மேலோங்க செய்யும் முயற்சிகளிலும் மாநில அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமாயணம் தொடர்பாக பொது அறிவு போட்டியை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.



இதுகுறித்து மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் ஆன்மிக துறை மந்திரி உஷா தாக்குர் கூறுகையில், “ராமாயணம் தொடர்பாக பொது அறிவு கேள்வி-பதில் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளோம். தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. வெற்றி பெறுவோருக்கு பரிசாக, உத்தரபிரதேசத்தின் அயோத்திக்கு இலவசமாக விமானத்தில் சென்று வருவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறக்கப்பட்டதும் அங்கு சென்று தரிசிக்கலாம்” என்றார்.




Tags:    

Similar News