செய்திகள்
சண்டை நடைபெற்று வரும் இடம்

புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப்படை- பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை

Published On 2021-10-16 09:28 GMT   |   Update On 2021-10-16 09:28 GMT
காஷ்மீரில் கடந்த 8-ந்தேதிக்குப்பிறகு 11 பயங்கரவாதிகள் 9 என்கவுண்டர் சம்பவங்களில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் துப்பாக்கிச்சண்டை அடிக்கடி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் வேட்டையாடி வருகின்றனர்.

இன்று புல்வாமா மாவட்டம் பாம்போர் பகுதியின் டிரங்பால் என்ற இடத்தில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. எல்.இ.டி. கமாண்டர் உமர் முஸ்டாக் காண்டே சுற்றி வளைக்கப்பட்டுள்ளார். இவர் போலீசார் அதிகாரிகளை கொலை செய்த மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

மூன்று மாடி கட்டிடத்தில் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதால், நடவடிக்கை சற்று தாமதமாகியுள்ளது. ஆனால், சண்டை நடைபெற்று கொண்டே வருகிறது. இரண்டு பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொலை செய்து விடுவோம்.



கடந்த 8-ந்தேதிக்குப்பிறகு 9 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 11 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர் என்று காஷ்மீர் ஐ.ஜி.பி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News