செய்திகள்
கோப்புப் படம்

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் சவுதி அரேபிய வெளியுறவு மந்திரி

Published On 2021-09-19 19:37 GMT   |   Update On 2021-09-19 19:37 GMT
சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹான் அல் சவுத்தின் இந்திய பயணத்தை மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றுள்ளார்.
புதுடெல்லி:

சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹான் அல் சவுத் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லிக்கு வந்தார். அவரது பயணத்தை மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டர் மூலம் வரவேற்றார்.

இதற்கிடையே, வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்-பைசல் பின் பர்ஹான் அல் சவுத் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசினர். ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கியமாக விவாதித்தனர்.



இந்நிலையில், சவுதி அரேபிய வெளியுறவுத் துறை மந்திரி பைசல் பின் பர்ஹான் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார்.

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பிற நாடுகளுடன் இந்தியா பேசி வரும் நிலையில், ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த சவுதி அரேபியாவின் பிரதிநிதி இந்தியாவுக்கு வந்து இந்த பேச்சுவார்த்தையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News